தருமபுரி, செப்டம்பர் 29:
இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் உலகளாவிய QS தரவரிசையில் முதல் 250 இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 இலட்சத்தைத் தாண்டக்கூடாது. பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல், மேலாண்மை, அறிவியல், வேளாண்மை, மருத்துவம், சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனிதநேயப் படிப்புகள், சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டப்படிப்புக்கான சேர்க்கை பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பப் படிவம் www.bcmbcmw.tn.gov.in/welfschemesminorities.html என்ற இணையதளத்தில் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 31.10.2025-க்குள் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை – 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என ஆட்சித்தலைவர் சதீஸ் தெரிவித்துள்ளார்.