தருமபுரி, செப்டம்பர் 29:
இந்நிகழ்வில் 350-க்கும் மேற்பட்ட அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு, மாவட்ட ஆட்சியரகம் தொடங்கி அரசு கலைக்கல்லூரி வரை விழிப்புணர்வு பேரணியாக சென்றனர். மேலும், கிராமிய கலைக்குழுக்களின் ஒயிலாட்டம், கரகாட்டம், தெருக்கூத்து, நாட்டுப்புறப் பாடல்கள் மூலமாக எச்.ஐ.வி./எய்ட்ஸ், பால்வினை நோய், காசநோய், இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் தொடங்கிவைக்கப்பட்டன.
மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, அரசு சாரா மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 40 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் அவர்கள் ஆட்டோ ரிக்ஷாக்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஒட்டி, துண்டுப் பிரசுரங்களை வழங்கி, நடமாடும் நம்பிக்கை மைய வாகனத்தின் மூலம் தீவிர பிரச்சாரத்தை துவக்கினார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, இணை இயக்குநர் (மருத்துவம் & ஊரக நலப்பணிகள்) சாந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐ. ஜோதி சந்திரா, மாவட்ட சுகாதார அலுவலர் வீ. இராஜேந்திரன், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சி.க. ஜெயதேவ்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.