தருமபுரி, செப். 01 (ஆவணி 16) –
திட்டத்தின் படி, எண்ணேகொல்புதூர் அணைக்கட்டில் இருந்து வலதுபுறம் 51 கி.மீ நீளத்தில் நீர்வரத்துக் கால்வாய் அமைத்து தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படும். இதற்காக கால்வாய் அமைக்கும் பணிக்கே 233 கோடி ரூபாய் மற்றும் நிலம் கையகப்படுத்த 112 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால்:
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து கிடைக்கும்.
-
தருமபுரி மாவட்டத்தில் தும்பலஅள்ளி ஏரியில் இருந்து 22 ஊராட்சிகளுக்குட்பட்ட 65க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பும்.
-
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
-
பல லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.
ஆனால், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிலம் வழங்கிய விவசாயிகளில் பலருக்கு இன்னும் முழுமையான ஈட்டுத்தொகை வழங்கப்படவில்லை. இதனால் பல விவசாயிகள் பொருளாதார சிரமத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டது.
எனவே, நிலம் அளித்த விவசாயிகளுக்கான ஈட்டுத்தொகையை விரைந்து வழங்கவும், கால்வாய் அமைக்கும் பணிகளை வேகமாக நிறைவேற்றி, தும்பலஅள்ளி அணைக்கு நீர் கொண்டு வரும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என எம்.எல்.ஏ வலியுறுத்தினார்.

