தருமபுரி, செப். 01 (ஆவணி 16) –
கூட்டத்தில் பொதுமக்கள் சாலை, குடிநீர், பேருந்து சேவை போன்ற அடிப்படை வசதிகள், பட்டா, சிட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சமர்ப்பித்தனர். மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகைகள் மற்றும் உபகரணங்கள் குறித்தும் மனுக்கள் வந்தன.
ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள், “பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து தீர்வு காண வேண்டும்” என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், பெறப்பட்ட அனைத்து மனுக்களும் தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் நல்லம்பள்ளி வட்டம் பூதனஅள்ளி கிராமத்தை சேர்ந்த செல்வன் ஆத்திஷ்குமார் (த/பெ. பெரியசாமி) என்பவருக்கு தொழிற்கல்வி பயில, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50,000/- காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. ரூபன் சங்கர் ராஜ், தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு. சுப்பிரமணியன், மகளிர் திட்ட இயக்குநர் திருமதி அ. லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) திருமதி பூங்கோதை, வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி காயத்ரி (தருமபுரி), திரு. செம்மலை (அரூர்), மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி தேன்மொழி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

