தருமபுரி, செப்.10 (ஆவணி 25):
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ர. சதீஷ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெறும் இம்முகாம்களில், பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக முன்வைக்கலாம். முன்வைக்கப்பட்ட குறைகள் தொடர்பாக உரிய துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அதிகபட்சம் 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முகாம் நடைபெறும் இடங்கள்:
-
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா – பி. மல்லாபுரம் சமுதாய கூடம், சந்தைதெரு)
-
தருமபுரி தாலுகா – தருமபுரி நகராட்சி (என்.கே. திருமண மண்டபம், சோகத்தூர்)
-
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் – (திருமகள் திருமண மண்டபம், சாமியாபுரம் கூட்ரோடு, பாப்பிரெட்டிப்பட்டி)
-
நல்லாம்பள்ளி ஒன்றியம் – (சோழியனூர் அரசு மேல்நிலைப்பள்ளி)
-
கரிமங்கலம் ஒன்றியம் – (சமுதாய கூடம், பெரியாம்பட்டி)
-
அரூர் தாலுகா – (செந்தூர் மண்டபம், செட்ரப்பட்டி)
மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை நேரடியாகக் கூறி, அரசின் உடனடி உதவியைப் பெறும் நல்ல வாய்ப்பாக இந்த முகாம்கள் அமையும். எனவே அதிக அளவில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
.gif)

.jpg)