தருமபுரி, செப்டம்பர் 26 | புரட்டாசி 10 :
தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற உள்ளன. இந்த முகாம்கள் 03.10.2025 முதல் வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடக்கவுள்ளன.
இதன் மூலம் கைச் சிக்கல், மூளை முடக்குவாதம், குள்ளத்தன்மை, தசைச்சிதைவு, பார்வை குறைபாடு, பேச்சு மற்றும் மொழித் திறன் குறைபாடு, காது கேளாதோர், இரத்தசோகை, தலசீமியா, பிற நரம்பியல் மற்றும் அறிவுசார் குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டைகளை பெறமுடியும். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆப. அவர்கள் மாற்றுத்திறனாளிகள் முகாம்களில் கலந்து, அட்டைகளை பெற்று பயணிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.