தருமபுரி, செப்டம்பர் 26 | புரட்டாசி 10 :
தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆப. தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் 2021-22 ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் அறிவிப்பின் அடிப்படையில், மகாத்மா காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
நிகழ்வுகள் விவரம்:
-
நாட்கள்: 07.10.2025, 08.10.2025
-
இடம்: தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி
-
நேரம்: காலை 09.30 மணி முதல்
தலைப்புகள்:
-
பள்ளி மாணவர்கள் (காந்தி): “காந்தி கண்ட இந்தியா – இமயம் முதல் குமரி வரை, தென்னாப்பிக்காவில் காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு”
-
கல்லூரி மாணவர்கள் (காந்தி): “சத்திய சோதனை, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள், உப்புசத்தியாகிரகத்தில் காந்தியடிகளின் பங்கு”
-
பள்ளி மாணவர்கள் (நேரு): “சுதந்திரப் போராட்டத்தில் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், மனிதருள் மாணிக்கம், குழந்தைகள் தினவிழா”
-
கல்லூரி மாணவர்கள் (நேரு): “ஆசிய லோதி, நேருவின் வெளியுறவுக் கொள்கை, நேரு கட்டமைத்த இந்தியா”
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்:
-
முதலாவது பரிசு: ரூ. 5,000
-
இரண்டாவது பரிசு: ரூ. 3,000
-
மூன்றாவது பரிசு: ரூ. 2,000
-
பாராட்டுச் சான்றிதழ் அனைவருக்கும்
-
அரசு பள்ளி சிறப்பு பரிசு: ரூ. 2,000 (இருவர்)
மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர்களின் அனுமதி பெற்று இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.
Permalink: