தருமபுரி, செப்டம்பர் 24 | புரட்டாசி 08:
தருமபுரி அரசு ஔவையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக (PTA) தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி மற்றும் தருமபுரி நகர திமுக செயலாளர் நாட்டான் மாது முன்னிலையிலிருந்தனர்.
நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக எஸ். சந்திரமோகன், பொருளாளராக நாட்டான் மாது ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். மேலும், சுருளிராஜன், டி.ஏ. குமார், எம்.ஏ. காசிநாதன், டி.எம். அன்பழகன், வெல்டிங் ராஜா, மாதேஷ் என்கிற பாபு, டி.பி. முருகன் ஆகியோர் உறுப்பினர்களாக பதவி ஏற்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக நகர துணை செயலாளர் வ. முல்லைவேந்தன், கே. கனகராஜ், ரஜினி ரவி, பி. செல்வராஜ், எஸ். ரஹீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.