அரூர், செப்டம்பர் 24 | புரட்டாசி 08:
தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணி சார்பாக ஆலோசனை கூட்டம் அரூர் என்.என். மஹாலில் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்ட செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் முன்னிலையில், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் T. சந்திரசேகர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இதில், தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ. மணி MP மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் K. குமரேசன் கருத்துரை வழங்கினர். அரூர் பேரூர் செயலாளர் முல்லைரவி நன்றி தெரிவித்தார். கூட்டத்தில் வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) செயல்படுத்துவதை வாக்குச்சாவடி முகவர்கள் (BLA-2) ஆய்வு செய்வது மற்றும் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், சட்டமன்றத் தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.