பொம்மிடி, செப். 2 (ஆவணி 17)
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பையர்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பொந்திகல் ஸ்ரீ நாரை கிணறு மாரியம்மன் ஆலயத் திருப்பணிகள் இன்று (செப்டம்பர் 2) முதல் வரிக்கல் வைத்து தொடங்கப்பட்டது.
இந்த மாரியம்மன் ஆலயத்தை கடந்த 10 தலைமுறைகளாக பொந்திகல் பகுதியின் பழங்குடியினர் வழிபட்டு வருகின்றனர். இப்போது மக்கள் வசதிக்காகவும், எதிர்கால சந்ததிகள் சீரிய முறையில் வழிபாடு செய்யும் வகையிலும், புதிய ஆலயம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
மொத்தம் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தலா ரூ.10,000 வரி வழங்கியதுடன், விரும்பியோர் நன்கொடையும் வழங்கியதால் ஆலயத் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முன்னோர்கள் கடைபிடித்த பாரம்பரிய வழக்கங்களை, இன்றைய சந்ததியினர் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.
தகடூர் குரல் பொம்மிடி செய்தியாளர் : திரு. ஜெ. வெங்கடேசன்