தருமபுரி, செப்.02 (ஆவணி 17) :
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் “Voter Adhikar Yatra” நிகழ்ச்சியில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தாயாரைப் பற்றியும், பிரதமர் மோடியைப் பற்றியும் அவதூறான வகையில் பேசினார். அந்த உரையின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து நாடு முழுவதும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, இன்று தருமபுரி தொலைதொடர்பு அலுவலகம் முன்பு மாவட்ட பாஜக தலைவர் சரவணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “ராகுல் காந்தி கைது செய்யப்பட வேண்டும், அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” எனக் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பாஜக பெண்கள் அணி மற்றும் பல்வேறு தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
- தகடூர்குரல் செய்திகளுக்காக தருமபுரி செய்தியாளர் முருகேசன்.