அரூர், செப்டம்பர் 27 | புரட்டாசி 11:
அரூர் அரசு விளையாட்டு மைதானத்தில் சர்வதேச சிலம்ப அகாடமி சார்பில் முதல் முறையாக நடைபெற்ற சிலம்ப மஞ்சள் பெல்ட் பயிற்சி முகாம் சிறப்பாக நிறைவுற்றது. இம்முகாமில் சிட்டிலிங் மலைப்பகுதி வேலனூர் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த நான்கு மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் உட்பட ஐந்து மாணவர்கள் பங்கேற்று, சிலம்ப செய்முறைகளை திறம்படக் கற்றுக்கொண்டு, மஞ்சள் பெல்ட் தகுதிச் சான்றிதழை பெற்றனர்.
மாணவர்களைப் பாராட்டும் வகையில், பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் வை.அரசு தலைமையில் மஞ்சள் பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி துணைத் தலைமை ஆசிரியர் பே.ஜெயகாந்தன், ஆசிரியர்கள் கு.கோகிலா, ஆ.பொன்னுசாமி, சே.காளிதாஸ், நா.சுஜாதா, பா.ஸ்ரீராம், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். சிலம்பம் தேசிய நடுவர் கே.சுரேஷ்குமார், பயிற்சியாளர் சிவசக்தி ஆகியோரும் உடனிருந்தனர்.