தருமபுரி, செப்டம்பர் 27 | புரட்டாசி 11:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நார்த்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மணிகண்டன் சமூக வலைதளத்தில் தனது தேவைகள் குறித்து கோரிக்கை வைத்திருந்தார். அந்தக் கோரிக்கையை கவனித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, நேரடியாக மணிகண்டனின் இல்லத்திற்கு சென்று அவரின் குறைகளை கேட்டறிந்தார். மேலும், அவருக்குத் தேவையான உதவிகள் விரைவில் செய்து தருவதாக உறுதி அளித்தார்.
இந்த நிகழ்வில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஏ.எஸ்.சண்முகம், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் நடராஜ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கௌதம், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மரி, மாவட்ட பிரதிநிதி பெருமாள், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முரளி, நிர்வாகிகள் சக்தி, செந்தில் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.