பாலக்கோடு, செப்டம்பர் 22 | புரட்டாசி 06:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
முதலில் பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 150 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் பேளாரஅள்ளி திருவள்ளுவர் நகரை சேர்ந்த தீணதயாளன் (25) என தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
இதுபோல, மாரண்டஅள்ளி அடுத்த எம்.செட்டிபட்டி சுடுகாடு பகுதியில் ரோந்து சென்ற போலீசார், சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் பாலிதீன் கவரில் 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (30) எனவும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.