தருமபுரி, செப்டம்பர் 22 | புரட்டாசி 06:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டாரத்தில் அரசு மதுபானங்களை சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்ததை அடுத்து, பாலக்கோடு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது பாலக்கோடு அடுத்த வாழைத்தோட்டம் கிராமத்தில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தி, விற்பனையில் ஈடுபட்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த குட்டி (45) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் அரசு மதுபானங்களை சட்டவிரோதமாக சேமித்து, பொதுமக்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ரூ.3,640 மதிப்புள்ள 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.