தருமபுரி, செப்டம்பர் 28 | புரட்டாசி 12:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II & II-A பதவிகளுக்கான முதல்நிலை (OMR) தேர்வு இன்று (28.09.2025) தருமபுரி மாவட்டத்தில் 65 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்நிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இஆப., அவர்கள் அதியாமான் கோட்டை செந்தில் மெட்ரிக் பள்ளி, அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு மையங்களை நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள், தேர்வர்களுக்கான வசதிகள் மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.
தேர்வை கண்காணிக்க 4 பறக்கும் படை அலுவலர்கள், 14 நடமாடும் குழுக்கள் மற்றும் 65 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மொத்தம் 20109 தேர்வர்கள் விண்ணப்பித்த நிலையில், 16055 பேர் தேர்வு எழுதினர்; 4054 பேர் வரவில்லை. இதன் மூலம் 79.84% பங்கேற்பு பதிவானது. இந்த ஆய்வின் போது நல்லம்பள்ளி வட்டாட்சியர் பிரசன்னா உள்ளிட்ட பல அலுவலர்கள் உடனிருந்தனர்.