பென்னாகரம், செப்டம்பர் 29 | புரட்டாசி 13:
பென்னாகரம் 110/33/11 கிலோ வோல்ட் துணைமின் நிலையத்தில் நாளை (29.09.2025) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதேசமயம், நெடுஞ்சாலை விரிவாக்க பணியில் இடையூராக உள்ள மின் கம்பங்களை மாற்றும் பணி நடைபெற உள்ளது.
இதனால், பென்னாகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், பெரும்பாலை, ஏரியூர், பாப்பாரப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை மின்சார நிறுத்தம் ஏற்படும் என்று செயற்பொறியாளர் / இ.ப. பென்னாகரம் (பொறுப்பு) தெரிவித்தார். பொதுமக்கள் இந்த மின் நிறுத்தத்தை கருத்தில் கொண்டு தேவையான முன்னறிவிப்புகளை எடுத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.