பாலக்கோடு, செப்டம்பர் 29 | புரட்டாசி 13:
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் பாபு, மாவட்ட துணை செயலாளர் சமியுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் யூசுப் கலந்து கொண்டு, இளைஞர்கள் புகை மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும் என்பதையும், கல்வி மற்றும் நல்லொழுக்கம் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உரையாற்றினார்.
ஸ்தூபி மைதானத்தில் தொடங்கிய பேரணி, காவல்நிலையம், நான்குரோடு, புறவழிச்சாலை, எம்.ஜி. ரோடு, பேருந்து நிலையம் வழியாக நடைபெற்றது. பங்கேற்பாளர்கள் போதைக்கு எதிரான பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் கிளைத் தலைவர் ஷிஹாப்புத்தீன், செயலாளர் அஸ்மத், பொருளாளர் அமீர்ஜான், ரபீக் சுலைமான் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் பெண்கள், ஆண்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.