Type Here to Get Search Results !

செம்மண்டகுப்பம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.


தருமபுரி, செப்டம்பர் 5, 2025 (ஆவணி 20) –

தருமபுரி மாவட்டம் செம்மண்டகுப்பம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி துவக்கி வைத்தார்.


இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்காக ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை அளித்தனர். அதேபோன்று, பட்டா மாற்றம், இலவச மனை பட்டா, முதியோர் உதவி தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களும் பொதுமக்களிடமிருந்து துறை சார்ந்த அலுவலர்களால் பெறப்பட்டன.


பெறப்பட்ட மனுக்களில் பலவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, மனுதாரர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வருவாய் கோட்டாட்சியர் நேரடியாக வழங்கினார். அதேவேளை, மருத்துவ முகாமும் ஒருங்கிணைக்கப்பட்டு, பொதுமக்கள் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் பி.பி. பரிசோதனை செய்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பிரபு ராஜசேகர், பேரூராட்சி தலைவர், ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


- தருமபுரி செய்தியாளர் முருகேசன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies