தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
முகாமினை மண்டல மேலாளர் தணிகாசலம், மாவட்ட தாட்கோ மேலாளர் ராமதாசு, மாவட்ட பதிவாளர் சுந்தரம், செயல் அலுவலர் திருமூர்த்தி, தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், பேரூராட்சி கவுன்சிலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
முகாமில் பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு தேவைகள் தொடர்பாக மனுக்களை துறை சார்ந்த அதிகாரிகளிடம் அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி ஆகியோர் பங்கேற்று, உடனடியாக பயனாளிகளை தேர்ந்தெடுத்து 30க்கும் மேற்பட்டோருக்கு பட்டா, மின்வாரிய பெயர் மாற்றம், கலைஞர் காப்பீட்டு அட்டை, மேலும் 6 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.93.12 லட்சம் வங்கி கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் வழக்கறிஞர் சந்திரசேகர், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம், பேரூராட்சி கவுன்சிலர்கள் வீணா, வேலு, புவனேஸ்வரி, மணிகண்டன், அபிராமி, காந்தி, சிவகுமார், வெங்கடேசன், சுகந்தி, ரமேஷ் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.