தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் 1, 13, 16 ஆகிய மூன்று வார்டுகளுக்கு சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி பூமி பூஜை செய்து, திட்டப் பணிகளின் துவக்கத்தை அறிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுகவின் .சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், கவுன்சிலர் ஜெயந்திமோகன், நகர அவைத் தலைவர் அமானுல்லா, பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன், சாதிக்பாஷா, ரூஹித், வார்டு செயலாளர் வடிவேல், ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி, நகர தொழிலாளர் அணி அமைப்பாளர் சக்திவேல், விவசாய அணி துணை அமைப்பாளர் படவட்டை, தகவல் தொழில்நுட்ப தொகுதி ஒருங்கிணைப்பாளர் லோகேஸ்வரி, நகர தொழில்நுட்ப அமைப்பாளர் ஸ்ரீதர், நகர இளைஞர் அணி அமைப்பாளர் மன்சூர், பி.கே.கணேசன், சிராஜ், நிர்வாகிகள் முருகன், சரவணன், கருணாநிதி, அஜித்முருகன், அன்பு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
.gif)

