பென்னாகரம், செப்டம்பர் 19 | புரட்டாசி 03:
நிகழ்விற்கு பென்னாகரம் தலைமை மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மைய மருத்துவர் கோ. முனுசாமி தலைமை வகித்தார். சித்த மருத்துவர் பிரசன்ன லட்சுமி, சமூக ஆர்வலர்கள் கமலேசன், கார்த்திக், பெருமாள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆர்வலர்கள் வெண்ணிலா மல்லமுத்து, சோனியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஏரியூர் தமிழ்ச்சங்கம் நிறுவனர் மற்றும் தலைவர் நா. நாகராஜ் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மா. பழனி பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், “கிராமங்களில் முப்பெரும் விழா நடத்துவது மகிழ்ச்சி தருகிறது. மக்கள் இயற்கையான உணவு முறையைக் கடைப்பிடித்து வாழ வேண்டும். மாணவர்கள் பாடப்புத்தகத்தைத் தாண்டி நல்ல வரலாற்று மற்றும் அறநெறி நூல்களையும் படிக்க வேண்டும். மேலும், அனைவரும் தருமபுரி புத்தகத் திருவிழாவிற்கு வருகை தர வேண்டும்,” என்றார்.
நிறைவாக சிகரல அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகி இயற்கை துரை முத்துக்குமார் நன்றி கூறினார். நிகழ்வில் கிராம மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.