தருமபுரி, செப்டம்பர் 26 | புரட்டாசி 10 :
தருமபுரி மாவட்டம், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (CPI(M)) சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தருமபுரி தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி ரூ.2,152 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.4.50 லட்சம் கோடி நிதி ஒதுக்க, ஆண்டுக்கு 200 நாள் வேலை, தினசரி சம்பளம் ரூ.700/- வழங்க, 60 வயது முடிந்தவர்களுக்கு ஒய்வு ஊதியம் வழங்க வேண்டும் என முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அர்ஜுனன், மணி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்திற்குட்பட்ட கிராமப்புற தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர். மாநில குழு உறுப்பினர் எம். குமார் நன்றி கூறினார்.