மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு விரைவில் தீர்வு காணும் நோக்கில் தமிழக அரசு மாநிலம் முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டத்தில் செப்டம்பர் 25, 2025 வியாழக்கிழமை பல இடங்களில் இம்முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ர. சதீஷ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெறும் இம்முகாம்களில் பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக முன்வைக்கலாம். முன்வைக்கப்பட்ட குறைகள் தொடர்பாக உரிய துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அதிகபட்சம் 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும்.
முகாம் நடைபெறும் இடங்கள்:
தேதி | Taluk | Block/Ward Name | முகாம் நடைபெறும் இடம் |
---|---|---|---|
25/09/2025 | Dharmapuri Municipality | Dharmapuri Municipality Ward 28,29 | செங்குந்தர் திருமண மண்டபம், நேசவாளர் காலனி |
25/09/2025 | Dharmapuri | Dharmapuri Semmandakuppam | செம்மண்டகுப்பம் கூட்டுறவு சங்கம் அரங்கம் |
25/09/2025 | Pennagaram | 1. Onnappagoundanahalli 2. Pallippatti | சிட்லகாரம்பட்டி, நரசிம்மசாமி கோவில் மண்டபம் மற்றும் ஓஜி ஹள்ளி |
25/09/2025 | Eriyur | Eriyur Bathrahalli Gendeyanahalli | ஊராட்சி அலுவலகம், பழையூர் |
25/09/2025 | Palacode | Belamaranahalli Gnapathi | கணபதி (சமூகக் கூடம்) |
25/09/2025 | Harur | 1. Keelmorappur 2. Vadugapatti | குழுமம் மஹால், கே. வேடரப்பட்டி |
மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை நேரடியாகக் கூறி, அரசின் உடனடி உதவியைப் பெறும் நல்ல வாய்ப்பாக இந்த முகாம்கள் அமையும். எனவே அதிக அளவில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும்” என தெரிவித்துள்ளது.