Type Here to Get Search Results !

காரிமங்கலத்தில் பெண்னை கடப்பாரையால் குத்தி கொன்றவர் கைது.


காரிமங்கலம், செப்டம்பர் 29: 

காரிமங்கலம் அடுத்த பல்லேனஅள்ளி கிராமத்தை சேர்ந்த மாதம்மாள் (55) கடந்த காலத்தில் தனது மகன்களால் வெளியூரில் கூலி வேலை செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான அருண்குமார் (27) மற்றும் மாதம்மாளுக்கு இடையில் நிலத்தகராறு இருந்து வந்தது.


நேற்று மாலை அருண்குமார் வீட்டிற்கு வந்து சொத்து குறித்து தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த அவர் கடப்பாரையால் மாதம்மாளின் வயிற்றை குத்தியதால் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். மாதம்மாளின் மருமகள் ஆர்த்தி (25) கையில் பலத்த காயம் ஏற்பட்டது.


சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் அருண்குமார் தப்பி ஓடியார். சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் மாதம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பினர். ஆர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். காரிமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி இன்று அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies