Type Here to Get Search Results !

பென்னாகரம் காவலர் தினம் – போலீசார் உறுதிமொழி ஏற்பு மற்றும் விளையாட்டு நிகழ்வுகள்.


பென்னாகரம் – செப். 05, 2025 / ஆவணி 24, 2056


பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று காவலர் தினத்தை முன்னிட்டு, போலீசார் உறுதிமொழி ஏற்றும் விழா மற்றும் அவர்களை கௌரவிக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


பென்னாகரம் டிஎஸ்பி திரு.பாலகிருஷ்ணன் உரையாற்றி, “போலீசார் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும், விருப்பு-வெறுப்பு இல்லாமல் பொதுமக்களிடம் அன்பாக பேசி பழக வேண்டும். ஆண் பெண் வேறுபாடின்றி சிறப்பாக பணியாற்ற வேண்டும். மன அழுத்தம் இருந்தாலும் குடும்பத்தை அன்போடு அரவணைத்து செல்ல வேண்டும். குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து, துறையில் சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும்” என உத்தரவு வழங்கினார்.


உறுதிமொழி ஏற்ற பிறகு, மைதானத்தில் கயிறு இழுக்கும் போட்டி, வாலிபால், செஸ், கிரிக்கெட், சேர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற போலீசார் மற்றும் மகளிருக்கு டிஎஸ்பி பரிசுகளை வழங்கினார்.


இந்த விழாவில் இன்ஸ்பெக்டர் குமரவேல், குமரவேல் பாண்டியன், சுரேஷ்குமார், முரளி இளவரசி, எஸ்ஐ சின்னமாதன், ஜீவானந்தம், பிரவீன்குமார், மாரி பரமேஸ்வரன், எஸ்பிசிஐடி. தனபால், முனிராஜ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் இன்பசேகரன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies