பாலக்கோடு, செப்டம்பர் 06 (ஆவணி 21):
பாலக்கோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர்.
சப்இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, எர்ரனஅள்ளி மேம்பாலம் அருகே பிளாஸ்டிக் கவர் ஏந்தியபடி சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபர் ஒருவரைக் கண்டனர். போலீசாரைக் கண்டு ஓட முயன்ற அவரை துரத்தி பிடித்து விசாரித்தபோது, அவர் கூசுக்கல் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி நவீன் (27) என தெரியவந்தது.
அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சா (மதிப்பு ரூ.2,000) பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நவீன் கைது செய்யப்பட்டு, அவர்மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்