பாலக்கோடு, செப்டம்பர் 27 | புரட்டாசி 11 :
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்று நாள் கலைத்திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. கல்லூரி முதல்வர் தீர்த்தலிங்கம் விழாவை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மாணவர்கள் மற்றும் மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் ஒயிலாட்டம், மயிலாட்டம், குச்சுபுடி உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.