ஏரியூர், செப்டம்பர் 05 (ஆவணி 20):
பென்னாகரம் அருகே ஏரியூரில், ஏரியூர் தமிழ்ச் சங்கம் தொடக்க விழா ஏரியூர் மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரி தாளாளர் சி. பஸ்பநாதன் தலைமை வகித்தார்.
சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மா. பழனி, கல்லூரி முதல்வர் ப. சடையன், சமூக ஆர்வலர் மா. நரசிம்மகுமார், சிகரலஅள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகி இயற்கை துரை முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏரியூர் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் நா. நாகராஜ் சங்க நோக்கவுரை வழங்கினார்.
கல்லூரி இயக்குநர் வெங்கடேசன், நிர்வாக மேலாளர் ராதிகா, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ம. இராஜகணபதி, சமூக ஆர்வலர் வெண்ணிலா மல்லமுத்து, அ. சதிஸ்குமார், கோ. முத்தரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ்ச் செம்மொழி இலக்கிய மன்றம் மற்றும் பனை இலக்கிய வட்டம் அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் ரா. சிலம்பரசன், நாமக்கல் மகேஹந்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சே. ஜெகன், கோயம்புத்தூர் கற்பகம் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் வி. ஜெயபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர்.
ஏரியூர் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்கள்:
- கிராமங்களில் தமிழ் வளர்ச்சியை ஊக்குவித்தல்
- அழிந்து வரும் கலைகளை மீட்டெடுத்தல்
- இலக்கிய நிகழ்வுகள் மூலம் மக்களுக்கு தமிழுணர்வு ஏற்படுத்தல்
- மாதந்தோறும் ஒரு கிராமத்தில் திருக்குறள் பரப்புரை செய்தல்
- மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் நடத்துதல்
- தேசிய, பன்னாட்டு கருத்தரங்குகள் ஏற்பாடு செய்தல்
- பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திறன் வளர் பயிற்சிகள் வழங்குதல்
நிறைவாக, சங்க பொருளாளர் த. சந்தோஷ்குமார் நன்றியைத் தெரிவித்தார். முன்னதாக சங்க செயலாளர் ம. அருள்குமார் வரவேற்புரை வழங்கினார். நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.