நல்லம்பள்ளி, செப்டம்பர் 12 (ஆவணி 27):
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா பக்தி பரவசத்துடன் மற்றும் விமர்சையாக நடைபெற்றது. இந்த விழா கடந்த 3 செப்டம்பர் கொடியேற்றத்துடன் தொடங்கி, காப்பு கட்டுதல் மற்றும் ழுளைப்பாலிகை இடுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 9 செப்டம்பர் அன்று கணபதி ஹோமம், தீர்த்த குடம், பால்குடம் ஊர்வலம் நடத்தப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
10 மற்றும் 11 செப்டம்பர் தேதிகளில் மங்கள இசை, யாகசாலை பிரவேசம், முப்பெரும் தேவிகள் மற்றும் தேவர்களுக்கு யாக பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. நாளை (12.09.2025) திருக்குடம் புறப்பாடு, சக்தி கலசங்கள் ஆலயத்தை வலம் வந்து, ஸ்ரீ அம்பிகேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
மேலும் வரும் செப்டம்பர் 30 அன்று 108 சங்கு பூஜை, ஸ்ரீ லலிதா ஹோமம் நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும், ஊர் பொதுமக்களும் இணைந்து செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.