பாலக்கோடு, செப்டம்பர் 11 (ஆவணி 26):
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், நல்லூர் கிராமத்தில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன உரிமைச் சட்டம் 2006-ன் கீழ் கிராம சபைகளை வலுப்படுத்துவதற்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இஆப., அவர்கள் கலந்து கொண்டு, பழங்குடியினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அடையாள அட்டைகளை வழங்கினார்.
கிராம சபாவில் கூட்ட அறிவிப்பு பதிவேடு, உறுப்பினர்கள் பெயர் பதிவு, கூட்ட வருகை பதிவேடு, தீர்மான புத்தகம் போன்றவை கட்டாயம் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், உரிமை கோரல் செயல்முறைகள், ஹோமங்கள், ஆவணத் தயாரிப்புகள், வன வளங்களை பாதுகாத்து சமூக முன்னேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் கிராம சபாவின் முக்கிய பொறுப்புகள் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மாநில அளவிலான FRA ATLAS வெளியீடு, பயிற்சிப்பட்டறைகள், 262 கிராமங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்ற பயிலரங்கங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். தருமபுரி மாவட்டத்தில் செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 9 வரை முகாம்கள் நடைபெற உள்ளன என்றும், உரிய ஆவணங்களுடன் பழங்குடியினர் மக்கள் கிராம சபா வன உரிமைக்குழுக்களில் தங்களது உரிமைக் கோரல்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட பழங்குடியினர் நலத் திட்ட அலுவலர் ஆ.க. அசோக்குமார், பாலக்கோடு வட்டாட்சியர் அசோக்குமார், பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பழங்குடியினர் மக்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)