தருமபுரி, செப்டம்பர் 27 | புரட்டாசி 11 :
தருமபுரி அரசு மருத்துவமனை அருகே நோயாளிகளின் பார்வையாளர்களுக்கும் பசித்தோருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக தினந்தோறும் அன்னதானம் வழங்கி வரும் மை தருமபுரி அமைப்பு, கடந்த மாதம் தொடங்கிய நொய்கஞ்சி வழங்கும் சேவை திட்டம் இன்று 50வது நாளை எட்டியது.
இந்த சேவை திட்டம் எண்ணங்களின் சங்கமம் (NDSO), சென்னை காமதேனு சாரிட்டிஸ், We For You அமைப்புகள் இணைந்து நடத்தி வருகின்றன. நோயாளிகளுக்கான ஆரோக்கிய உணவாக நொய்கஞ்சி வழங்கப்படுவதால், பலர் இதன் பயனை பெற்று வருகின்றனர்.
50வது நாள் சிறப்பு நிகழ்வில், எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், மை தருமபுரி நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் செந்தில், கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு நொய்கஞ்சி வழங்கினர்.