தருமபுரி, செப்டம்பர் 23 | புரட்டாசி 07:
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியம் சார்பில், மதிமுக தலைவர் மற்றும் இயக்கத் தலைவர் வைகோ அவர்களின் 82வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதற்கட்ட நிகழ்வாக பெரமாண்டபட்டி கிராமத்தில் நடைபெற்ற விழாவில், அக்கட்சி ஒன்றிய செயலாளர் ஆர். ஜெகநாதன் தலைமையிலான நிகழ்வில், மதிமுக மாவட்ட செயலாளர் கோ. இராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர், ஏழை எளிய மாணவர்களுக்கும், கிராம மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி விழாவை கொண்டாடினார்.
இந்நிகழ்வில், மதிமுகவின் மாவட்ட துணை செயலாளர் சி. பட்டுராசா, மாநில விவசாய அணி துணை செயலாளர் பி.எம். ராஜாமணி, மாவட்ட விவசாய அணி செயலாளர் வெங்கடாசலம், கிளை செயலாளர்கள் சன்முகம், அன்பரசு, சமூக ஆர்வலர் சின்னமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தலைவர் பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்திய ஒன்றிய செயலாளர் ஆர். ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.