மாரண்டஹள்ளி, செப்டம்பர் 10 (ஆவணி 25):
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே அத்தி முட்லு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மாதுராஜ் (42) திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
மாதுராஜ், மனைவி ஜோதி, ஒரு மகன் மற்றும் ஒரு மகளை கொண்ட குடும்பம். நேற்று முன்தினம் (செப்டம்பர் 9) இரவு, அவருக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக மாரண்டஅள்ளி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மாதுராஜ் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.