Type Here to Get Search Results !

அரூரில் அதிமுக பொது செயலாளர்எடப்பாடி பழனிச்சாமி எழுச்சி பயணத்தையொட்டி ஆலோசனை கூட்டம்


அரூர், செப். 10 (ஆவணி 25):

தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்குவேம்பு மற்றும் மத்தியபட்டி பகுதிகளில், வரும் செப்டம்பர் 17, 2025 அன்று நடைபெற உள்ள “மக்களை காப்போம் – தமிழகம் மீட்போம்” அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணத்தை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


மாவட்ட செயலாளர் கே.பி. அன்பழகன், எம்.எல்.ஏ., மற்றும் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத் குமார், எம்.எல்.ஏ., தலைமையில் கூட்டம் நடைபெற்றது.


அரூர் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர். பசுபதி, அரூர் நகர செயலாளர் ஏ.ஆர்எஸ்.எஸ். பாபு (அறிவழகன்), மாவட்ட துணைச் செயலாளர் திருமதி. செண்பகம் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இக்கூட்டத்தில் திரு. ஓ. பாஷா, எம்.ஏ. ஏகநாதன், திரு. சிவன், திரு. விஜி உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமாக பங்கேற்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies