Type Here to Get Search Results !

தென்னிந்திய பல்கலைக்கழக சதுரங்கப் போட்டிக்கு தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவி தகுதி பெற்றார்.


தருமபுரி, பிப்.28:
 


தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்ற தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவி கே.சி.கவியரசியை கல்லூரி முதல்வர் முனைவர் கோ.கண்ணன் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.


சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மகளிருக்கான சதுரங்கப் போட்டிகள் சேலம் வைசியா கல்லூரியில் 21.01.2026 மற்றும் 22.01.2026 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 100-க்கும் அதிகமான மாணவிகள் கலந்து கொண்டனர்.


இந்தப் போட்டிகளில் தருமபுரி அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த 6 சதுரங்க வீராங்கனைகள் பங்கேற்றனர். தனிநபர் மகளிர் பிரிவில் கணிதவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி கே.சி.கவியரசி மூன்றாம் இடம் பெற்று, தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றார்.


தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சதுரங்கப் போட்டிகள் 21.02.2026 முதல் 23.02.2026 வரை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள GITAM University வளாகத்தில் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்க சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆறு வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவி கே.சி.கவியரசியும் இடம்பெற்றுள்ளார்.


இதனை முன்னிட்டு 20.02.2026 அன்று கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் முனைவர் கோ.கண்ணன் தகுதிச் சான்றிதழ் மற்றும் வெற்றி கோப்பைகளை வழங்கி பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் உடற்கல்வி இயக்குநர் பாலமுருகன், கணிதத்துறை தலைவர் அரங்கநாயகி, பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு கவியரசிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies