Type Here to Get Search Results !

உலக அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தினத்தை முன்னிட்டு “மை தருமபுரி” அமைப்பு சார்பில் “மை தருமபுரி விருதுகள் 2026” வழங்கும் விழா நடைபெற்றது.


தருமபுரி, பிப். 28:
 


உலக அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தினத்தை முன்னிட்டு “மை தருமபுரி” அமைப்பு சார்பில் “மை தருமபுரி விருதுகள் 2026” வழங்கும் விழா நடைபெற்றது. சமூக சேவையில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் வகையில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கூந்தல் தானம் வழங்கிய பெண்களுக்கு “கூந்தல் தான காரிகை”, ஆண்களுக்கு “கூந்தல் தான வேந்தன்” விருதுகள் வழங்கப்பட்டன.


இரத்த தானம் செய்த பெண்கள் மற்றும் சாதனை பெண்களுக்கு “தகடூர் தங்கத் தாரகை” விருது, புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு தட்டணுக்கள் தானம் வழங்கிய நபர்களுக்கு “தட்டணுக்கள் நாயகன்” விருது, சமூகத்தில் சிறந்த பங்களிப்பு ஆற்றும் ஆண்களுக்கு “தகடூர் மனிதநேயர்” விருது வழங்கப்பட்டது.


மேலும், அமைப்பின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைத்து வரும் பாராமெடிக்கல் கல்லூரி நிர்வாகத்திற்கும் சிறப்பு விருது வழங்கி பாராட்டப்பட்டது.


விழாவில் தங்கம் மருத்துவமனை மருத்துவர் செந்தில், கயல் குழுமம் நிர்வாக இயக்குநர் அறிவழகன், பிஜிஆர் மருத்துவமனை ராஜேஷ், குழந்தைகள் மருத்துவர் தீபக், பூக்கடை ரவி மருத்துவமனை மருத்துவர் அசோகன், டாம்ஸ் சுரேஷ் சுப்பிரமணியன், டெர்பி ஷோரூம் நரேந்திரன், ரயில்வே ஒப்பந்ததாரர் பரமசிவம், மாருதி ரத்த வங்கி வெங்கடாசலம், செந்தில் குமார் டிப்பார்ட்மென்ட் கார்த்திக் குமார், ஆடிட்டர் தேவராஜ், பிஎஸ்பி டிப்பார்ட்மென்ட் சுரேஷ், நடிகர் கதிரவன், ஸ்ரீ சரவணா எலக்ட்ரிக்கல்ஸ் ராகவ் திலக் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


விழாவிற்கு “மை தருமபுரி” அமைப்பின் நிறுவனத் தலைவர் முனைவர் சதீஸ் குமார் ராஜா வரவேற்புரை வழங்கினார். பொருளாளர் ஜலபதி ராஜா, ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர்கள் செந்தில், கிருஷ்ணன், சண்முகம், சையத் ஜாபர், விஜயகாந்த் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.


முதுநிலை ஆசிரியர் சௌந்தரராஜன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மித்ரா மீடியாஸ் அலெக்சாண்டர் புகைப்பட பதிவு செய்தார். தருமபுரி ஸ்ரீ மியூசிக் அகாடமி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். சமூக நலன், மனிதநேயம் மற்றும் தன்னார்வ சேவைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies