தருமபுரி, செப்டம்பர் 28 | புரட்டாசி 12:
தருமபுரி மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய 7-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவில், திமுக மேற்கு மாவட்ட மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் முனைவர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூல் வெளியிடப்பட்டது.
இந்நூலை முன்னாள் அமைச்சரும் திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான முனைவர் பி. பழனியப்பன் வெளியிட்டார். நூலை கவிஞர் மனுஷ்யபுத்திரன், கவிஞர் அன்புதீபன், இயக்குநர் கரு. பழனியப்பன், முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விழாவில் வருவாய் கோட்டாசியர் காயத்ரி, வட்டாச்சியர்கள் மோகன்தாஸ், ராஜராஜன் உள்ளிட்டோர், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.