அரூர், செப்டம்பர் 22 | புரட்டாசி 06:
தருமபுரி மாவட்டம், அரூரில் சர்வதேச சிலம்பாட்ட சாலை இணைப்பு மற்றும் ஸ்ரீவெற்றிவேல் தற்காப்பு சிலம்பம் அடிமுறை பயிற்சி பள்ளி இணைந்து நடத்திய ஒன்று முதல் சிலம்பக் கச்சை தேர்வு அரூர் உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் நரிப்பள்ளி, வேலனூர், எல்லப்புடையாம்பட்டி, வேப்பம்பட்டி, அரூர் பகுதிகளிலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று, சிலம்பத்தில் இரண்டாம் நிலை பெல்ட் பயிற்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு திமுக அரூர் நகர செயலாளர் முல்லைரவி கலந்து கொண்டு, தேவையான வால் மற்றும் கம்பு பொருட்களை வழங்கி, வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தேசிய சிலம்பம் பயிற்சியாளர் வினோத்குமார், பாமக நகர செயலாளர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் பேக்கரி பெருமாள், மணி கிளாஸ் எம்போரியம் உரிமையாளர் மணி, மருது சேனை மாவட்ட செயலாளர் கமலநாதன், ஆசிரியர் வை. அரசு, உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிதுரை, முருகேசன், பிசிகல் டைரக்டர் யோகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய சிலம்பம் மற்றும் அடிமுறை நடுவர் கே.சுரேஷ்குமார் பயிற்சியாளர் சிவசக்தி செய்திருந்தனர்.