தருமபுரி, செப்டம்பர் 22 | புரட்டாசி 06:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பாலவாடி ஊராட்சியில் திமுக கிளை கூட்டம் நடைபெற்றது. நல்லம்பள்ளி வடக்கு ஒன்றிய செயலாளர் வைகுந்தம் தலைமையில் நடைபெற்ற இச்செய்திக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.செங்குட்டுவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
மகளிர் உரிமைத் தொகை, புதுமை பெண் திட்டம், நான் புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்களை பற்றி செங்குட்டுவன் மக்களுக்கு விளக்கினார். கூட்டத்தில் முன்னாள் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெ. சுப்ரமணி, மாவட்ட துணை செயலாளர் உமா சங்கர், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ரவி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் யாஸ்மின் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.