தருமபுரி, செப்டம்பர் 22 | புரட்டாசி 06:
இம்மனுக்களை விரைந்து தீர்க்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். மக்கள் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளதாகவும், அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தருமபுரி IDB வங்கி கிளை CSR நிதியிலிருந்து 6 அரசு பள்ளிகளுக்காக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். பாலக்கோடு ஒன்றிய சக்கிலிநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வாழைத்தோட்டம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வாழைத்தோட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி, ஈச்சம்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி, சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் இதில் பயனடைந்தன.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, தமிழ்நாடு நுகர்பொருள் வணிகக் கழக மேலாளர் திரு. தணிகாசலம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி தேன்மொழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) திருமதி சுமதி மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.