தருமபுரி, செப்.22 (புரட்டாசி 06):
இந்திய தேர்தல் ஆணையம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 29A-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுதோறும் தங்களின் வருடாந்திர கணக்கு தணிக்கை அறிக்கையும் தேர்தல் செலவின அறிக்கையும் உரிய காலக்கெடுவில் சமர்ப்பிக்க வேண்டும் என வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இது அரசியல் கட்சிகளின் பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மைக்காக கட்டாயமாகும்.
ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் இந்த விதிகளை பின்பற்றாதது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில், தருமபுரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள “தமிழர் மக்கள் கட்சி (Tamilar Makkal Katchi)க்கும் காரணம் தெரிவிக்க வாய்ப்பு அளித்து ஆணையம் அறிவிக்கை வழங்கியுள்ளது.
அறிவிக்கையில், கட்சியின் பொறுப்பாளர்கள் 09.10.2025-க்கு முன்னதாக எழுத்துப்பூர்வ விளக்கத்தை சமர்ப்பிக்கவும், அதே நாளில் பிற்பகல் 4.30 மணிக்கு நேரடியாக விசாரணைக்கு ஆஜராகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாளுக்குள் விளக்கம் அளிக்காத பட்சத்தில், தொடர்ந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்தார்.