தருமபுரி, செப். 23 | புரட்டாசி 07:
தருமபுரி விளையாட்டரங்கில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான தேர்வு சதுரங்க போட்டியில் பள்ளி மாணவர்கள் இடையே கடுமையான போட்டிகள் நடைபெற்றன. ஏழு சுற்றுகளில் தனியார் பள்ளி மாணவர் தர்மேஷ் முகுல் 6.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். மேலும், அவர் அரினா இன்டர்நேஷனல் மாஸ்டர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் மாநில அளவில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பை சதுரங்க போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.
அதே போட்டியில் அதிக புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தவர் தேவேஷ் முகுல். இருவரும் சகோதரர்கள் என்பதும், இதுவரை 85க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களை பாராட்டும் வகையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர், மாணவன் தர்மேஷ் முகுலுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் D. சாந்தி, போட்டியின் முதன்மை நடுவர் P. ராஜசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.