தருமபுரி, செப்.22 | புரட்டாசி 06:
மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு விரைவில் தீர்வு காணும் நோக்கில் தமிழக அரசு மாநிலம் முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டத்தில் செப்டம்பர் 23, 2025 செவ்வாய்க்கிழமை பல இடங்களில் இம்முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ர. சதீஷ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெறும் இம்முகாம்களில் பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக முன்வைக்கலாம். முன்வைக்கப்பட்ட குறைகள் தொடர்பாக உரிய துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அதிகபட்சம் 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும்.
முகாம் நடைபெறும் இடங்கள்:
தேதி | தாலுக்கா | பகுதி/பிளாக் | முகாம் இடம் |
---|---|---|---|
23/09/2025 | Dharmapuri | Andialli Kondampatti | பஞ்சாயத்து அலுவலகம், ஆண்டிஹள்ளி |
23/09/2025 | Nallampalli | 1. Narthampatti, 2. Laligam, 3. Mittareddihalli | சக்தி சுப்பிரமணியர் மஹால், இலளிகம் |
23/09/2025 | Morappur | 1. Bannikulam, 2. Vagurappampatti | சேவை மையம், வகுரப்பம்பட்டி |
23/09/2025 | Kadathur | Maniyampadi Oshahalli | சமூக கூடம், மணியம்பட்டி |
23/09/2025 | Karimangalam | 1. Bandharahalli, 2. Murukkampatti | சமூக கூடம், முருக்கம்பட்டி |
23/09/2025 | Harur | 1. Maruthipatti, 2. M. Velampatti | அரசு மேல்நிலை ஆண்கள் விடுதி, திறந்தவெளி, மருதிப்பட்டி |
மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை நேரடியாகக் கூறி, அரசின் உடனடி உதவியைப் பெறும் நல்ல வாய்ப்பாக இந்த முகாம்கள் அமையும். எனவே அதிக அளவில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும்” என தெரிவித்துள்ளது.