தருமபுரி, செப்டம்பர் 24 | புரட்டாசி 08:
தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அவசர ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ. மணி தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் MGS வெங்கடேஸ்வரன் வரவேற்றார்.
இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் செல்வராஜ், ராஜகோபால், கார்த்திக், முத்தமிழன், அசோக்குமார் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி மற்றும் தர்மபுரி தொகுதி பார்வையாளர் டி. செங்குட்டுவன் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தில் பாக இளைஞர் அணி நிர்வாகிகள் நியமித்தல், 2026 தேர்தல் பணி தொடர்பான திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் உமாசங்கர், ஆறுமுகம், நகர செயலாளர் நாட்டான் மாது, பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஏ. எஸ். சண்முகம், வைகுந்தம், மல்லமுத்து, டி. எல். காவேரி, ஏரியூர் செல்வராஜ், மடம் முருகேசன், கருணாநிதி, வீரமணி, பச்சையப்பன், கிருஷ்ணன், சக்திவேல், பேரூர் செயலாளர் வீரமணி, சண்முகம் மற்றும் தேர்தல் பணி குழு தலைவர்கள் கலந்துகொண்டனர். நன்றியுரை செல்வராஜ், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வழங்கினார்.