நல்லம்பள்ளி, செப். 24 | புரட்டாசி 08:
தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் திரு.டாக்டர் கைலாஷ் குமார் உத்தரவின் பேரில் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட சிப்ஸ் தயாரிக்கும் நிலையங்களில் ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டது.
மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் திரு. சரண்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வில், உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத கடைக்கு நோட்டீஸ் வழங்கி ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், உரிமையாளர்களுக்கு புதிய எண்ணை மட்டுமே பயன்படுத்தி சிப்ஸ், முறுக்கு, மிச்சர் போன்ற தின்பண்டங்களை சுத்தமாகவும், சுகாதார முறையில் தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, விதிகளை மீறும் கடைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.