தருமபுரி, செப்டம்பர் 26 | புரட்டாசி 10 :
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்து, பாப்பாரப்பட்டி அருகே உள்ள சிட்லகாரம்பட்டியில் ஓஜிஹள்ளி, பள்ளிப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்காக “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. பென்னாகரம் பிடிஓக்கள் லோகநாதன், சக்திவேல் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், ஏராளமான பொதுமக்கள் மகளிர் உரிமைத் தொகை, வீட்டு மனை பட்டா, சிட்டா மறுதல், தேசிய ஊரக வேலை வாய்ப்பு, முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக சமர்ப்பித்தனர்.
இதில் சில மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, தேசிய ஊரக வேலை வாய்ப்பு பணிக்கான அட்டைகள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணி, பிடிஓக்கள் லோகநாதன், சக்திவேல், திமுக ஒன்றிய செயலாளர் வீரமணி ஆகியோரால் வழங்கப்பட்டது. இம்முகாமிற்கான ஏற்பாடுகளை ஓஜிஹள்ளி மற்றும் பள்ளிப்பட்டி செயலாளர்கள் சண்முகம், விஜயா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.