தருமபுரி, செப்டம்பர் 26 | புரட்டாசி 10 :
தருமபுரி மாவட்டம், தருமபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மாண்டகுப்பம் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் செம்மாண்டகுப்பம் கூட்டுறவு சங்கம் அருகில் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்ததோடு, தீர்வு காணப்பட்ட மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மகளிர் உரிமைத் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, சிட்டா பட்டா பெயர் மாற்றம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் துறை சார்ந்த அலுவலர்களிடம் மனுக்கள் அளித்தனர். மேலும், மருத்துவ முகாமில் பிபி, நீரிழிவு, இதய நோய் உள்ளிட்ட சுகாதார பரிசோதனைகள் பொதுமக்களுக்காக மேற்கொள்ளப்பட்டன. இம்முகாமில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, ஒன்றிய செயலாளர் பிரபு ராஜசேகர், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.