தருமபுரி, 25.09.2025 | புரட்டாசி 09
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமையன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் மனு நாள் நிகழ்வின் இறுதியில், உள்ளாட்சி அமைப்புகளின் தூய்மைப்பணியாளர்களுக்கான கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து தீர்வு காணும் சிறப்பு வாய்ப்பை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஏற்பாட்டினால், தூய்மைப்பணியாளர்கள் தங்களது பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முன்வைத்து விரைவான தீர்வைப் பெறலாம். எனவே, தூய்மைப்பணியாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.