தருமபுரி, செப்டம்பர் 23 | புரட்டாசி 07:
தருமபுரியில் 7-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, “தருமபுரி வாசிக்கிறது” என்ற சிறப்பு நிகழ்வு மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டது. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வீடுகள், நூலகங்கள் என பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் வாசிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு, புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, மை தருமபுரி NGO மற்றும் டான் சிக்சாலயா பப்ளிக் பள்ளி இணைந்து, பள்ளி வளாகத்தில் “தருமபுரி வாசிக்கிறது” நிகழ்வை நடத்தியது. இதில் பள்ளி தாளாளர் சவிதா உதயகுமார், முதல்வர் ஜீவா, FUVISION இயக்குனர் உதயகுமார் சின்னசாமி, எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், மை தருமபுரி சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மாணவர்களிடம் புத்தக வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தினர். நிகழ்வில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, வாசிப்பு நிகழ்வை சிறப்பித்தனர்.